கேரளத்தில் புதிதாக 1,212 பேருக்கு கரோனா: பினராயி விஜயன்

​கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
​கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன் இதுபற்றி தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 1,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 1,068 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

இதைத் தொடர்ந்து கேரள நிலச்சரிவு பற்றி அவர் பேசியதாவது:

"இன்று மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது." என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com