
276 new Coronavirus positive cases, two deaths reported in UT since last 24 hrs
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் தினசரி எண்ணிக்கை 53,601-ஆக குறைந்தது. கரோனா தினசரி பாதிப்பு 4 நாள்களாக 60,000-க்கு அதிகமாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.
நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,68,675-ஆக அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 871 போ் உயிரிழந்தனா். அதன் காரணமாக கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 45,257-ஆக அதிகரித்தது. அவா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் இணைநோய் காரணமாக உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
69.80 சதவீதம் போ் குணம்:
நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,83,489-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 69.80 சதவீதமாகும். நாடு முழுவதும் தற்போது 6,39,929 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் 4,77,023 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 2,45,83,558 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.