'மகாராஷ்டிரம், தமிழகத்தில் விரைவில் கரோனா உச்சமடையும்'

நாட்டில் மொத்த கரோனா பாதிப்பில் 31 சதவிகித நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் விரைவில் கரோனா உச்சடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
'மகாராஷ்டிரம், தமிழகத்தில் விரைவில் கரோனா உச்சமடையும்'
'மகாராஷ்டிரம், தமிழகத்தில் விரைவில் கரோனா உச்சமடையும்'


புது தில்லி: நாட்டில் மொத்த கரோனா பாதிப்பில் 31 சதவிகித நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் விரைவில் கரோனா உச்சடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாட்டில் மொத்த கரோனா நோயாளிகளில் 81 சதவிகித கரோனா நோயாளிள் 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் கரோனா நோயாளிகளில் மகாராஷ்டிரத்தில் 23 சதவிகிதமும், தமிழகத்தில் 8 சதவிகித கரோனா நோயாளிகளும் இருக்கிறார்கள், இந்த மாநிலங்களில் விரைவில் கரோனா உச்சம் அடைந்து, விரைவில் அங்கு கரோனாவில் இருந்து விடுபடும் காலம் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவ நிபுணர்கள் இது பற்றி கூறுகையில், மகாராஷ்டிரமும், தமிழகமும் கரோனா உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. பிரதமர் மோடி, கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 10 மாநிலங்களில், தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால் ஒட்டுமொத்த நாட்டிலும் கரோனா கட்டுப்படும் என்று குறிப்பிட்டதைப் போலவே இவ்விரு மாநிலங்களிலும் கரோனா உச்சமடையப்போகிறது.

மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் புதிதாக கரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கையால் உச்சமடைவது தடுக்கப்பட்டு வருகிறது. தில்லியில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் கரோனா தொற்று உச்சத்தைத் தொட்டது. பிறகு அது மெல்ல குறைந்து வருவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் பிரபாகரன் துரைராஜ் கூறுகையில், தில்லியைப் போலவே மகாராஷ்டிரமும், தமிழகமும் கரோனா உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொருத்தவரை கரோனா உச்சமடைவது குறித்து அறுதியிட்டு எதையும் கூற முடியாது, தற்போதிருக்கும் அமைப்பைப் பார்க்கும் போது உச்சமடைவதை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது என்றார்.

தில்லியில் கரோனா பரிசோதனை மையத்தின் தலைவர் அல்பனா ரஸாதான் கூறுகையில், ஜூலை கடைசி வாரத்தில் தில்லியில் கரோனா உச்சத்தை அடைந்தது. பிறகு கரோனா பாதிப்பு மெல்ல குறைந்தது, இதுதான் உச்சமடைவதன் உதாரணம், அதுபோலவே மகாராஷ்டிரம், தமிழகத்திலும் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு திரும்ப கரோனா பாதிப்பு மெல்ல குறைந்துவிடும் என்கிறார்.

நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் கரோனா உச்சமடையாது, புவியியல் அமைப்புக்கு ஏற்ப கரோனா உச்சமடைவது மாறுபடும் என்று துரைராஜ் கூறுகிறார்.

மாநிலங்களில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் போதுதான் உச்சமடைவது தெரியவரும், தற்போது மகாராஷ்டிரத்திலும் தமிழகத்திலும் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. போதுமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இது சாத்தியமில்லை என்றும் அல்பனா கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com