
Karnataka Health Minister B Sreeramulu's mother and brother tested positive for COVID-19 on Thursday.
கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவின் தாய் மற்றும் சகோதரருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரின் நேரடி தொடர்பில் இருந்ததால், அவர்கள் முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.