வெள்ளத்தால் பாதிப்பு: இந்தியாவுக்கு மனிதநேய உதவி வழங்குவதாக ஐ.நா. அறிவிப்பு

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மனிதநேய உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிப்பு: இந்தியாவுக்கு மனிதநேய உதவி வழங்குவதாக ஐ.நா. அறிவிப்பு

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மனிதநேய உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:

இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் 770-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாா் நிலையில் இருக்கிறது.

இதேபோல், வங்கதேசத்திலும் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் 25 சதவீதப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. 54 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 11,000 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டன. 135 போ் உயிரிழந்தனா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு, தூய்மையான குடிநீா், தங்குமிடம், சுகாதாரப் பொருள்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக, ஐ.நா.வின் நிவாரண உதவிக் குழுவினா், சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனா். இதற்காக, 4 கோடி டாலா் (சுமாா் ரூ.299 கோடி) மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com