தவறான புரிதலால் ஏற்பட்ட குழப்பங்களை மறந்துவிட வேண்டும்: அசோக் கெலாட்

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமல் கூட சட்டப்பேரவையில் எங்களால் பெரும்பான்மையை நிரூபித்திருக்க முடியும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
தவறான புரிதலால் ஏற்பட்ட குழப்பங்களை மறந்துவிட வேண்டும்: அசோக் கெலாட்
தவறான புரிதலால் ஏற்பட்ட குழப்பங்களை மறந்துவிட வேண்டும்: அசோக் கெலாட்

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமல் கூட சட்டப்பேரவையில் எங்களால் பெரும்பான்மையை நிரூபித்திருக்க முடியும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசியலில் அதிருப்தியில் இருந்த மாநில முன்னாள் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சச்சின் பைலட் கடந்த வாரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்கு பிறகு ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒருமாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின்  அதிருப்தி குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் கட்சி நியமித்தது. இதனைத்தொடர்ந்து சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (வியாழக் கிழமை) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சச்சின் பைலட் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துகொண்டு அசோக் கெலாட்டுடன் கைக்குலுக்கி சமரசத்தை வெளிப்படுத்தினார். இதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 

சட்டமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திற்கு முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமல் கூட சட்டப்பேரவையில் எங்களால் பெரும்பான்மையை நிரூபித்திருக்க முடியும். ஆனால், அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்களுக்கு வாக்களிக்கும் நம்பிக்கையை கொண்டுவருவோம் என்று கூறினார். 

மேலும் இதுகுறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, காங்கிரஸ்  கட்சியில் கடந்த மாதத்தில் தவறான புரிதலால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மீதும், மாநிலத்தின் மீதும், மக்களின் மீதும் உள்ள அக்கறையால் இதனை நாம் மன்னித்து மறந்துவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com