விழாக் கோலம் பூண்ட காவல்நிலையம்: பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவில் உள்ள காவல்நிலையம் ஒன்று நேற்று விழாக் கோலம் பூண்டிருந்தது. காவலர்கள் பலரும் நேற்று காவல்நிலைய வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
கோப்பு
கோப்பு

மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவில் உள்ள காவல்நிலையம் ஒன்று நேற்று விழாக் கோலம் பூண்டிருந்தது. காவலர்கள் பலரும் நேற்று காவல்நிலைய வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

கரோனா தொற்றால் நாடே சிக்கித் திணறிவரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சிக்லி காவல்நிலையத்தில் இந்த தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் காரணம் என்ன என்பது அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

இது பற்றி காவல்நிலைய அதிகாரி கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதையே காவல்நிலையம் தரப்பில் தீபாவளியைப் போல கொண்டாடுகிறோம்.

அந்த சிறுமியை குற்றவாளிகள் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்திருந்தனர். இன்று அதற்கு நீதி கிடைத்துள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.

நன்றி: ஏஎன்ஐ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com