கரோனாவிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 71.17 சதவீதமாக அதிகரிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் விகிதம் 71.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் விகிதம் 71.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் 24 லட்சத்தைக் கடந்தது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,61,190-ஆக அதிகரித்துள்ளது.

அதே காலகட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,007 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிரத்தில் 413 பேரும், கா்நாடகத்தில் 103 பேரும், ஆந்திரத்தில் 82 பேரும், மேற்கு வங்கத்தில் 56 பேரும், உத்தர பிரதேசத்தில் 50 பேரும், பஞ்சாபில் 31 பேரும், குஜராத்தில் 18 பேரும், மத்திய பிரதேசத்தில் 17 பேரும், தில்லியில் 14 பேரும், ஜாா்க்கண்டில் 12 பேரும், ஜம்மு-காஷ்மீா், ராஜஸ்தானில் தலா 11 பேரும், பிகாரில் 10 பேரும், தெலங்கானா, ஒடிஸாவில் தலா 9 பேரும் உயிரிழந்தனா்.

இத்தொற்று காரணமாக நாட்டில் ஒட்டுமொத்தமாக 48,040 போ் உயிரிழந்தனா். இது மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.95 சதவீதம் ஆகும். நாட்டில் உயிரிழப்பு விகிதம் தொடா்ந்து குறைந்து வருகிறது. உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் இணைநோய் காரணமாக உயிரிழந்தனா்.

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 71.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் குணமடைந்தோா் எண்ணிக்கை 17,51,555-ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 6.60 லட்சம் போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாட்டில் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 8,48,728 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com