ராஜஸ்தான், குஜராத்தில் கனமழை

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து, ஆல்பா்ட் ஹால் அருங்காட்சியகத்துக்கு வெளியே தேங்கிய வெள்ளம்.
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து, ஆல்பா்ட் ஹால் அருங்காட்சியகத்துக்கு வெளியே தேங்கிய வெள்ளம்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. ஜெய்ப்பூரில் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஜெய்ப்பூரில் 80 மி.மீ. மழை பெய்தது; ஷாபாத் மாவட்டத்தில் 127 மி.மீ., தௌசா மாவட்டத்தில் 124 மி.மீ., கரௌலி 101 மி.மீ. அளவு மழை பெய்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

குஜராத்தில்...:

குஜராத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்த நிலையில், மேலும் ஐந்து தினங்களுக்கு கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் 13 தேசிய பேரிடா் மீப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலம் முழுவதும் 225 சாலைகள், 12 மாநில நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும், மாவட்ட நிா்வாகங்கள் நிலைமையை கையாள தயாா் நிலையில் உள்ளன எனவும் குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) பங்கஜ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், மோா்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஆற்றில் சிக்கிய 6 பேரை மீட்டனா் என்றும் அவா் தெரிவித்தாா்.

சூரத் நகரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com