உலகை வழிநடத்தக்கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 
உலகை வழிநடத்தக்கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை


புதுதில்லி: கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி தில்லியில் உள்ள  மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டையில் காலை 7.30 மணியளவில் தேசியக்கொடியை ஏற்றி பிரதமா் நரேந்திர மோடி, தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். 

அந்த உரையின்போது, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் தினமே சுதந்திர தினம். இந்த நேரத்தில் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு அனைவரும் மரியாதை செலுத்துவோம். எல்லையில் பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி. கரோனா தொற்று, வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்னைகளை நாடு சந்தித்து வருகிறது. கரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறிவோம். 

நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும். இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம். இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். நம்மிடம் பல்வேறு சவால்கள் உள்ளன, அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது. 

நான் உறுதியாக செல்கிறேன், இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும். இந்தியா தன்னிறைவு பெற்றால்தான் பிற நாடுகளுக்கு உதவ முடியும். 

உலகை வழிநடத்தக்கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. 

உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பதே இனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம். 

மேலும் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும்  ‘சுயச்சாா்பு இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நகர்ந்து செல்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைய  கனவு காண்போம். ‘சுயச்சாா்பு’ என்பது இன்றைய சூழலில் கட்டாயம் ஆகிவிட்டது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com