கேரளத்தில் புதிதாக 1,725 பேருக்கு கரோனா: மேலும் 13 பேர் பலி

​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கேரளத்தில் புதிதாக 1,725 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்திலிருந்து 461 பேர், மலப்புரத்திலிருந்து 306 பேர். மேலும் 13 பேர் பலியானது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 45 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 75 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 1,572 பேருக்கு கரோனா பரவல் மூலம் தொற்று பாதித்துள்ளது. இதில் 94 பேருக்கு எந்தத் தொடர்புமூலம் பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, கேரளத்தில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 15,890 ஆகியுள்ளது. இதுவரை மொத்தம் 30,009 பேர் குணமடைந்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com