மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,492 பேருக்கு கரோனா: மேலும் 326 பேர் பலி

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,492 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
​மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,492 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. (கோப்புப்படம்)
​மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,492 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,492 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,492 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,43,289 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 326 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 21,359 ஆக உயர்ந்துள்ளது.  

அதேசமயம், ஒரேநாளில் 12,243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,59,124 பேர் குணமடைந்துள்ளனர்; 1,62,491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 17 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,697 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,342 பேர் சிகிச்சை பெற்று ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர். தற்போதைய நிலையில் 95 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடைசியாக ஆகஸ்ட் 3-ம் தேதி 12 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஒற்றை இலக்கிலேயே கரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், 16 நாள்களுக்குப் பிறகு இன்று இரட்டை இலக்கில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்திலிருந்தே கரோனா பலி எண்ணிக்கை பற்றிய தரவுகளை வெளியிடுவதை மும்பை மாநகராட்சி தவிர்த்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com