மகாராஷ்டிர சிறைகளில் 1,478 பேருக்கு கரோனா: 6 கைதிகள் பலி

மகாராஷ்டிரத்தில் உள்ள 27 சிறைகளில் மொத்தம் 1,478 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 கைதிகள் கரோனாவால் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர சிறைகளில் 1,478 பேருக்கு கரோனா: 6 கைதிகள் பலி
மகாராஷ்டிர சிறைகளில் 1,478 பேருக்கு கரோனா: 6 கைதிகள் பலி

மகாராஷ்டிரத்தில் உள்ள 27 சிறைகளில் மொத்தம் 1,478 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 கைதிகள் கரோனாவால் உயிரிழந்தனர்.

நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. மருத்துவர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சிறைக் கைதிகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மகாராஷ்டிரத்திலுள்ள 27 சிறைகளில் 1,166 கைதிகளுக்கும், 312 சிறைப்பணியாளர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக நாக்பூர் மத்திய சிறையில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புனே ஏர்வாடா மத்திய சிறையில் 190 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அர்தூர் சாலை சிறையில் 182 கைதிகளுக்கும், சாங்லி சிறையில் 145 பேரும் கரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் (62), மும்பை (46), தானே (35), கல்யான் (31) என்ற அளவில்  கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,166 கைதிகளில் 848 கைதிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 312 சிறைப் பணியாளர்களில் 272 பேர் குணமடைந்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து இதுவரை 10,536 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com