
ஏழைகளுக்கு பணத்தைக் கொடுங்கள்: ராகுல்
புது தில்லி: கரோனா பொது முடக்கம் தொடங்கியது முதலே தான் கூறி வரும் ஒற்றைக் கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ராகுல் காந்தி. அது ஏழை மக்களுக்கு பணத்தைக் கொடுங்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பல மாதங்களாக நான் எதைக் கூறி வந்தேனோ, அதையே தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது.
மத்திய அரசு செய்ய வேண்டியவை:
- அதிகமாகக் கடனை வசூலிப்பதை விடுத்து, அதிகம் செலவிடுங்கள்.
- பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு வரிச் சலுகை வழங்காதீர்கள். மாறாக ஏழை மக்களுக்கு பணத்தைக் கொடுங்கள்.
- நுகர்வு மூலமாக இந்திய பொருளாதாரத்தை மீண்டும் தொடக்குங்கள்.
ஊடகங்கள் மூலம் பொதுமக்களை திசைதிருப்புவது, ஏழை மக்களுக்கோ, பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பேரிடரை மறையச் செய்யவோ உதவாது என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...