
கர்நாடகத்தில் புதிதாக 8,580 பேருக்கு கரோனா: மேலும் 133 பேர் பலி
கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,580 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 133 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 8,580 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,00,406-ஆக அதிகரித்துள்ளது. இதில் 83,608 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (புதன்கிழமை) புதிதாக 7,249 பேர் குணமடைந்தனர். இதனால் இதுவரை 2,11,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 133 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,091-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 760 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...