மத்தியப் பிரதேசத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

கனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்புநிற எச்சரிக்கையை இந்திய வானிலை நிலையம் விடுத்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தி 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மத்தியப்பிரதேசத்தி 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்புநிற எச்சரிக்கையை இந்திய வானிலை நிலையம் விடுத்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலகாட், டிக்காம்கர், தாமோ மற்றும் சாகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜபல்பூர், ரேவா மற்றும் ஷாடோல் ஆகிய மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்,பெய்த  பலத்த மழையைத் தொடர்ந்து மேற்கு மத்தியப் பிரதேசத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com