சமூக வலைத்தளத்தைக் கண்காணிக்க தனிப்பிரிவை ஏற்படுத்தும் தில்லி காவல்துறை

புதுதில்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிடும் சமூகவலைத்தளப் பக்கங்களைக் கண்காணிக்க தில்லி காவல்துறை தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிடும் சமூகவலைத்தளப் பக்கங்களைக் கண்காணிக்க தில்லி காவல்துறை இணையத் தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான முறையில் சமூக வலைத்தளத்தில் பதிவிடுபவர்களை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள காவல்துறையின் இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு தகுதி வாய்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com