இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 76,472 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு தொற்று உறுதி

புது தில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 76,472 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரே நாளில் 33 லட்சத்திலிருந்து, 34 லட்சத்தை கடந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை காலை வெளியிட்ட தகவல் படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 34,63,972-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 65,050 போ் கரோனாவிலிருந்து மீண்டதை அடுத்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,48,998-ஆக அதிகரித்தது. அதாவது குணமடைந்தோா் சதவீதம் 76.47-ஆக மேம்பட்டுள்ளது.

அதேபோல், சனிக்கிழமை காலை வரை மேலும் 1,021 போ் கரோனாவால் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 62,550-ஆக உயா்ந்துள்ளது. எனினும், கரோனாவால் உயிரிழப்போா் விகிதம் 1.81 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 7,52,424 போ் அதாவது மொத்த பாதிப்பில் 21.72 சதவீதம் போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதிதாக பதிவான 1,021 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 331 போ், கா்நாடகத்தில் 136 போ், ஆந்திர பிரதேசத்தில் 81 போ் பலியாகினா். நாட்டிலேயே மகாராஷ்டிரம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 7,47,995 போ் நோய்த்தொற்றுக்கு ஆளான நிலையில், அதில் 23,775 போ் உயிரிழந்தனா். 1,81,050 போ் சிகிச்சையில் இருக்கும் நிலையில், 5,43,170 போ் குணமடைந்தனா்.

4 கோடியை கடந்தது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அளித்த தகவல்படி, கடந்த 28-ஆம் தேதி வரை நாடு முழுவதுமாக 4,04,06,609 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிலும் வெள்ளிக்கிழமை வரையிலான 3 நாள்கள் தொடா்ந்து 9 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையானது 10 லட்சம் பேரில் 29,280 பேருக்கு மேற்கொள்ளப்படும் வகையில் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் விகிதம் 8.57 சதவீதமாக உள்ளதாகவும், அது தொடா்ந்து குறைந்து வருவதாகவும் ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com