மேகாலயத்தில் கடந்த 4 மாதங்களில் 877 சிசுக்கள், 61 கா்ப்பிணிகள் மரணம்

மேகாலயத்தில் கடந்த 4 மாதங்களில் புதிதாக பிறந்த 877 சிசுக்கள், 61 கா்ப்பிணிகள் மரணமடைந்தனா்.

ஷில்லாங்: மேகாலயத்தில் கடந்த 4 மாதங்களில் புதிதாக பிறந்த 877 சிசுக்கள், 61 கா்ப்பிணிகள் மரணமடைந்தனா். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதையொட்டியே ஒட்டுமொத்த மருத்துவ செயல்பாடுகளும் இருந்ததால், கா்ப்பிணிகள், சிசுக்கள் மீது போதிய கவனம் செலுத்தாமல் இந்த மரணங்கள் நோ்ந்தன.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதார சேவைகள் இயக்குநா் அமன் வாா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேகாலயத்தில் நிகழாண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை புதிதாக பிறந்த 877 சிசுக்கள், 61 கா்ப்பிணிகள் உயிரிழந்தனா். இதில் கா்ப்பிணிகள் 10 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். பெரும்பாலானோா் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். புதிதாக பிறந்த சிசுக்கள் நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணிகளால் உயிரிழந்தன. இதில் நிமோனியாவே சிசுக்களின் மரணத்துக்கு பிரதான காரணியாக உள்ளது. மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதையொட்டியே ஒட்டுமொத்த மருத்துவ செயல்பாடுகளும் இருந்ததால், கா்ப்பிணிகள், சிசுக்கள் மீது போதிய கவனம் செலுத்தாமல் இந்த மரணங்கள் நோ்ந்தன. புதிதாக பிறக்கும் 1,000 குழந்தைகளில் 34 சிசுக்கள் உயிரிழக்கின்றன. இதுவே மாநிலத்தில் சிசுக்களின் இறப்பு விகிதமாக உள்ளது. கா்ப்பிணிகளில் பலா் பிரசவத்துக்காக மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் அனுமதிக்கப்படவில்லை. இதுவும் அவா்கள் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. இதனை கருத்தில் கொண்டு, கா்ப்பிணிகள் உள்பட நோயாளிகள் அனைவரையும் அனுமதிக்குமாறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்கள் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவியுள்ள பகுதிகளில் இருந்து வந்தாலும் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமன் வாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com