புதிய கல்விக் கொள்கையால் மாற்றங்கள் நிகழும்: பிரதமர் மோடி

நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்க வேண்டும். இதன் மூலம் நமது பாரம்பரிய விளையாட்டுகளும், அதன் நுட்பங்களும் உலகிற்கு பறைசாற்றப்படும்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதிய கல்விக்கொள்கையால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்க வேண்டும். இதன் மூலம் நமது பாரம்பரிய விளையாட்டுகளும், அதன் நுட்பங்களும் உலகிற்கு பறைசாற்றப்படும்.

விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பொம்மைகள் தயாரிக்கும் மையமாக தஞ்சாவூர் உள்ளது. பொம்மைகள் உருவாக்கும் முறை புதியக் கல்விக்கொள்கையில் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பேரிடர் மீட்பு பணிகளின்போது வீரர்களின் துரிதமான பணிக்கு நாய்களின் பங்கு மிகமுக்கியமானது. இந்திய பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நாட்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். பொதுமக்களும் நாட்டு நாய்களை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கான செலவினமும் குறைவானது.

கல்வி, அறிவுத்திறன், உடற்பயிற்சி என மக்கள் வாழ்க்கைமுறையை எளியமையாக்க ஏராளமான செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசுத்திட்டங்களை தங்களது தாய் மொழியில், எழுத்து, ஆடியோ, விடியோவாக தெரிந்துகொள்ளும் வகையில் அரசு செயலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன'' இவ்வாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com