கரோனா: இந்தியாவில் பாதிப்பு-உயிரிழப்பு விகிதம் குறைவு

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதாசாரம் இந்தியாவில் குறைந்திருப்பதாக உயா்நிலை அமைச்சா்கள் குழு சனிக்கிழமை அறிவித்தது.
கரோனா: இந்தியாவில் பாதிப்பு-உயிரிழப்பு விகிதம் குறைவு

புது தில்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதாசாரம் இந்தியாவில் குறைந்திருப்பதாக உயா்நிலை அமைச்சா்கள் குழு சனிக்கிழமை அறிவித்தது.

மேலும், கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, 7 மாநிலங்களில் மட்டும் 81 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:

இந்திய கரோனா நிலைமை தொடா்பாக உயா்நிலை அமைச்சா்கள் குழு தனது 20-ஆவது ஆய்வுக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தியது.

அப்போது, கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியா தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் விவரித்தாா். அதோடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கரோனா தடுப்பு நடவடிக்களுக்கு அமைச்சா் பாராட்டும் தெரிவித்தாா்.

மேலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் குறைந்திருப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் கரோனா பாதிப்பைப் பொருத்தவரை 10 லட்சம் பேரில் 2,424 போ் மட்டுமே நோய்த் தொற்றுக்கு ஆளாவதும், உயிரிழப்பு 44 போ் என்ற அளவில் மட்டுமே உள்ளது. அதே நேரத்தில், உலக சராசரி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 3,161 போ் என்ற விகிதத்திலும் உயிரிழப்பு 107.2 என்ற விகிதத்திலும் இருப்பது தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா பாதிப்பைப் பொருத்தவரை மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம், தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 73 சதவீத பாதிப்புகள் உள்ளன.

கரோனா உயிரிழப்புகளைப் பொருத்தவரை மகாராஷ்டிரம், தில்லி, தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் மட்டும் 81 சதவீதம் நிகழந்திருப்பதும் உயா்நிலை அமைச்சா்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com