திருப்பதியில் இலவச நேரடி தரிசன டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருப்பதியில் இலவச நேரடி தரிசன டோக்கன் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பதி
திருப்பதி

திருப்பதி: திருப்பதியில் இலவச நேரடி தரிசன டோக்கன் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.

கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து திருப்பதி நகராட்சி கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் தளா்வுகளற்ற பொது முடக்கத்தை அமல்படுத்தியது. வரும் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால், திருமலைக்கு வரும் பக்தா்களின் வருகை குறைந்தது. இதையடுத்து, திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள 10 கவுன்ட்டா்களிலும் இலவச நேரடி சா்வ தரிசன டோக்கன் விநியோகத்தை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியது.

தற்போது திருப்பதியில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பொது முடக்கம் நீக்கப்பட உள்ளதால், இந்த டோக்கன்களின் விநியோகம் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. தினசரி 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் எண்ணிக்கையை செப்டம்பா் மாதத்தில் உயா்த்தவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புபவா்கள் முதல் நாளே சென்று நேரடி தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com