சிக்கிம், டோக்கா லாம் எல்லையில் வான் பாதுகாப்பு நிலைகளை உருவாக்கும் சீனா

சிக்கிம் மற்றும் டோக்கா லாமில் உள்ள சர்சைக்குரிய எல்லையின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி இரண்டு புதிய வான் பாதுகாப்பு நிலைகளை சீனா உருவாக்கி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. 



புது தில்லி: சிக்கிம் மற்றும் டோக்கா லாமில் உள்ள சர்சைக்குரிய எல்லையின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி இரண்டு புதிய வான் பாதுகாப்பு நிலைகளை சீனா உருவாக்கி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. 

இந்திய ராணுவ ஆய்வாளர் ஒருவர் சுட்டுரையில் வெளியிட்ட படங்களில், சிக்கிம் மற்றும் டோக்கா லாமில் உள்ள சர்சைக்குரிய எல்லையின் இரு முக்கிய பகுதிகளில் தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை ஏவுகணைகள் மூலம் தாக்குவதற்கான இரு நிலைகளை சீன ராணுவம் உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இவ்விரு பகுதிகளும் எதிரி நாட்டு விமானங்கள் வருவதை எச்சரிக்கும் ரடார் கண்காணிப்புப் பகுதிகளாக அறியப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நிலைகளை உருவாக்குவதன் மூலம், எதிரி நாட்டு விமானங்களை சீன ராணுவத்தால் மிக துல்லியமாக தாக்க முடியும். 

டோக்கலாம் பீடபூமியையொட்டி  டோக்கா கணவாயில் இருந்து  சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்தியா-பூடான்-சீன எல்லைகளின் முச்சந்திப்பில் ஒரு நிலை அமைக்கப்படுகிறது. சிக்கிம் எதிரே உள்ள சீனப் பகுதியில் மற்றொரு நிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை ஒட்டியுள்ள தனது எல்லையில் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நிலைகளை சீனா உருவாக்கி வருகிறது. 

இந்தப் பகுதியில் தான் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய}சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, இருநாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. இதனால் அங்கு 73 நாள்கள் பதற்றம் நீடித்தது 
குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com