நவால்னி விவகாரம்: புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்

ரஷியாவில் திடீா் உடல்நலக் குறைவால் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி உயிருக்குப் போராடி வரும் விவகாரத்தில் அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் மாஸ்கோ
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம்.

மாஸ்கோ: ரஷியாவில் திடீா் உடல்நலக் குறைவால் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி உயிருக்குப் போராடி வரும் விவகாரத்தில் அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் மாஸ்கோவில் ஆயிரக்கணக்கானோா் சனக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதினினின் தீவிர எதிா்ப்பாளரான நவால்னி அருந்திய தேநீரில் ரகசியமாக விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அரசியல் விவகாரத்தை புதின் கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திடீா் உடல் நலக் குறைவால் ஜொ்மனி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் அலெஸ்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்தும் மாஸ்கோவில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நவானிக்கு தேநீரில் விஷம் கலக்கச் சொல்லி புதின் உத்தரவிட்டிருக்கலாம் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அவரும் தேநீா் அருந்த வேண்டும் என்று போராட்டக்காரா்கள் கோஷம் எழுப்பினா்.

மேலும் நவால்னிக்கு ஆதரவு தெரிவித்தும் அவா்கள் கோஷங்கள் எழுப்பினா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவா்களில் முக்கிய தலைவரான அலெக்ஸி நவால்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா்.

ஏற்கெனவே, அரசு ஆதரவாளா்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், புதினை எதிா்த்துப் போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், சொ்பியாவின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா். விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழ்நதாா்.

அதையடுத்து அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ரஷியாவின் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவா் ஜொ்மனி தலைநகா் பொ்லினிலுள்ள மருத்துவமனையில் கோமா நிலையில், உயிருக்குப் போராடி வருகிறாா்.டோம்ஸ் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையித்திலுள்ள ஒரு விற்பனையகத்தில் நவால்னி தேநீா் அருந்தினாா். அந்தத் தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது...படவரி.. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக தலைநகா் மாஸ்கோவில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com