பத்திரிகையாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு: ஒருவர் கைது

மும்பை பத்திரிகையாளர் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கிய ஒடிசாவைச் சேர்ந்த 45 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை பத்திரிகையாளர் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கிய ஒடிசாவைச் சேர்ந்த 45 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அதேவேளையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறாகவும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவர் பெயரில் மற்றொருவர் போலியாக தங்களது கணக்கை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றும் செயலும் நடைபெறுகிறது.

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 31 வயதான பத்திரிகையாளர் ஒருவர் தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கைத் தொடங்கப்பட்டதை அறிந்துள்ளார். தனது பெயரிலான போலி முகநூல் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பியதைக் கண்டறிந்த அவர் அதுகுறித்து காவல்துறையினரிடம் புகாரளிக்க முடுவெடுத்துள்ளார்.

இதனையடுத்து குறிப்பிட்ட போலியான முகநூல் கணக்கைக் குறித்து மலபார் காவல்துறையை அணுகியுள்ளார். பத்திரிகையாளரின் புகாரை விசாரணைக்கு ஏற்ற காவல்துறையினர் போலியான முகநூல் கணக்கை உருவாக்கியவரைக் கண்டறிந்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த 45 வயதான கைலாஷ் யாதவ் எனத் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com