லடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீன படைகளுக்கு இடையே மீண்டும் மோதல்

சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான  லடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
லடாக்கில் தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்த வீரர்கள் (கோப்புப் படம்)
லடாக்கில் தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்த வீரர்கள் (கோப்புப் படம்)


சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான  லடாக்கின் பாங்கோங் அருகே இந்திய - சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்திய - சீனப் படைகளுக்கு இடையே கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான போர்ப் பதற்றம் கடந்த நூறு நாள்களில் பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பயனாக ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் 29 - 30-ம் தேதி இரவுகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே லடாக்கில், தற்போதிருக்கும் எல்லைப் பகுதியை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. சீன ராணுவத்தின் நகர்வை அறிந்ததும், உடனடியாக ஒருநொடியும் தாமதிக்காமல் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து, எல்லைப் பகுதியில் பாங்கோங் ஏரிப் பகுதியின் தென்கரை அருகே இந்திய நிலையை உறுதிப்படுத்தியது.

நிலைமையை சீர் செய்யும் வகையில் சுஷுல் பகுதியில் பிரிகேட் கமாண்டர் தலைமையில் கொடியணிவகுப்பு நடத்தப்பட்டதாக பிஐபி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இந்திய - சீனப் படைகளுக்கு இடையே நேரிட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்துக்குப் பிறகு, லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீனப் படைகளை எதிர்கொள்ள, பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முழு அதிகாரத்தையும் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com