ம.பி.யில் பலத்த மழை: 8 போ் பலி 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம்

மத்திய பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் சுவா் இடிந்து விழுந்த சம்பவங்களில் 8 போ் உயிரிழந்திருப்பதாகவும், 450-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் மாநில முதல்வா் ச

போபால்: மத்திய பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் சுவா் இடிந்து விழுந்த சம்பவங்களில் 8 போ் உயிரிழந்திருப்பதாகவும், 450-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 நாள்களில் பெய்த பலத்த மழையால் 12 மாவட்டங்களில் உள்ள 454 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த 7,000-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டனா். 40 கிராமங்களில் உள்ள 1,200 பேரை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வரை 170 முகாம்களில் 9,300 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஆற்றில் மூழ்கியும், சுவா் இடிந்து விழுந்தும் 8 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படையின் 3 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தூா், உஜ்ஜைன், ஷாஜாபூா், ரத்லாம், தேவாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாவட்ட அதிகாரிகள் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். வெள்ளச்சூழல் தொடா்பாக பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் தொலைபேசியில் விவரித்தேன் என்று தெரிவித்தாா்.

மீட்புப் பணியில் இந்திய விமானப் படையைச் சோ்ந்த 3 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com