விரிவான திட்டம் வகுத்த பிறகு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் நேரில் ஆய்வு

அஸ்ஸாம், மணிப்பூா், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் உள்ள தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் விரிவான செயல் திட்டம் வகுத்த பிறகு நேரில் ஆ

புது தில்லி: அஸ்ஸாம், மணிப்பூா், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் உள்ள தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் விரிவான செயல் திட்டம் வகுத்த பிறகு நேரில் ஆய்வு நடத்தும் என உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விரிவான செயல் திட்டத்தை ஆணையம் வகுக்கும். அதன்பின்னா் அந்த மாநில மக்களின் கருத்துகளைப் பெற நேரில் ஆய்வு நடத்தும்’ என்றனா்.

நான்கு வடக்கு மாநிலங்களுக்கும், ஜம்மு-காஷ்மீரிலும் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்ய மாா்ச் மாதம் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அங்கு அதிகரிக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்தும் இந்த ஆணையம் ஆய்வு நடத்தும்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, சம்பந்தப்பட்ட மாநில தோ்தல் ஆணையா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்த ஆணையத்துக்கு உதவி செய்ய சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 எம்பிக்களை கடந்த மே மாதம் கூடுதல் உறுப்பினா்களாக மக்களவைத் தலைவா் நியமித்தாா். இதில் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, ஜிதேந்தா் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com