கேரளத்தில் புதிதாக 1,530 பேருக்கு கரோனா

​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,530 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,530 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,530 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,530 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட தரவுகள்:

கேரளத்தில் புதிதாக 1,530 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 54 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 80 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 1,367 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 136 பேருக்கு யார் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது கண்டறியப்படவில்லை. 

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,693 பேருக்கு பரிசோதனையின் முடிவில் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,488 ஆகியுள்ளது. இதுவரை மொத்தம் 51,542 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

1,98,843 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com