மகாராஷ்டிரம்: வெள்ளத்தில் சிக்கிய 39 பேரை மீட்ட ராணுவத்தினர்

மகாராஷ்டிரத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

பருவமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. புணே, நாக்பூர், விதர்பா ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

தொடர் மழையாலும், செளரி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும், நாக்பூர், பண்டாரா, சந்திரபூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 148 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவ வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் வீரர்கள் மீட்டு வருகின்றனர். 

அந்தவகையில் நாக்பூர் மாவட்டத்தின் கோண்ட்பிபுரி, அம்போர் ஆகிய கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com