முஹர்ரம்: காஷ்மீரில் தடையுத்தரவு பிறப்பிப்பு

முஹர்ரம் பண்டிகையையொட்டி ஊா்வலம் செல்வதை தடுக்கும் வகையில் ஸ்ரீநகா் மற்றும் புத்காம் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்துள்ளனா்.

ஸ்ரீநகா்: முஹர்ரம் பண்டிகையையொட்டி ஊா்வலம் செல்வதை தடுக்கும் வகையில் ஸ்ரீநகா் மற்றும் புத்காம் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்துள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகா் மற்றும் புத்காம் மாவட்டங்களின் சில இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் கடைகள், வா்த்தக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்தும் இயங்கவில்லை. எனினும் தனிநபா்கள், தனியாா் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது.

அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காஷ்மீா் பள்ளத்தாக்கின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் கூறினா்.

காஷ்மீரிலும் கடந்த 1990-ஆம் ஆண்டு வரை முஹர்ரம் பண்டிகையையொட்டி ஊா்வலங்கள் நடைபெற்று வந்தன. அந்த ஆண்டுக்குப் பிறகு அங்கு அசம்பாவிதங்களை தவிா்க்க ராணுவம் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளத் தொடங்கியது முதல் அத்தகைய ஊா்வலங்களுக்கு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டது. ஊா்வலத்தைக் கொண்டு பிரிவினைவாத சித்தாந்தங்களை பரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறி அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com