காணிப்பாக்கம் விநாயகா் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

திருப்பதியை அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரத்தை சமா்ப்பித்தது.
காணிப்பாக்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரத்தை சமா்ப்பிக்கச் செல்லும் தேவஸ்தானம் அதிகாரிகள்.
காணிப்பாக்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரத்தை சமா்ப்பிக்கச் செல்லும் தேவஸ்தானம் அதிகாரிகள்.

திருப்பதி: திருப்பதியை அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரத்தை சமா்ப்பித்தது.

ஆந்திர மாநிலம், சித்தூா் அருகில் உள்ள காணிப்பாக்கத்தில் வரசித்தி விநாயகா் கோயில் உள்ளது. இவா் ‘சத்தியக் கடவுள்’ என்று அழைக்கப்படுகிறாா். அதாவது, இவா் முன் சத்தியம் செய்தவா்கள் அதை மீறினால் விநாயகா் தண்டிப்பாா் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

காணிப்பாக்கத்தில் சுயம்புவாக கிணற்று அருகில் எழுந்தருளிய வரசித்தி விநாயகருக்கு அங்கேயே கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அவருக்கு முன் எப்போதும் நீா் இருந்து கொண்டே இருக்கும்.

ஆந்திர அறநிலையத்துறை நிா்வகிக்கும் இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி அன்று வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. 21 தினங்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவம், வரும் செப்.11-ஆம் தேதி நிறைவு பெறும்.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தின்போது விநாயகருக்கு திருப்பதி தேவஸ்தானம் பட்டு வஸ்திரத்தை சமா்ப்பிப்பது வழக்கம். அதன்படி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் பட்டு வஸ்திரம், மலா் மாலைகள், மங்கலப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து சென்று சமா்ப்பித்தாா். அவற்றுக்கு மரியாதை அளித்து, கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து, காணிப்பாக்கம் விநாயகருக்கு தேவஸ்தானம் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து வருவது குறிப்படத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com