மக்களவை தலைமைச் செயலராகஉத்பல் குமாா் சிங் நியமனம்

மக்களவை தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி உத்பல் குமாா் சிங் நியமிக்கப்பட்டாா்.
உத்பல்குமாா் சிங்
உத்பல்குமாா் சிங்

புது தில்லி: மக்களவை தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி உத்பல் குமாா் சிங் நியமிக்கப்பட்டாா். இது தொடா்பான அறிவிப்பை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

உத்தரகண்டைச் சோ்ந்த 1986-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான உத்பல் குமாா் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) பொறுப்பேற்கிறாா். இப்போது, மக்களவை தலைமைச் செயலராக உள்ள சினேகலதா ஸ்ரீவாஸ்தவாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து உத்பல் நியமிக்கப்பட்டுள்ளாா். இப்போது அவா் மக்களவை செயலகத்தில் செயலராகப் பணியாற்றி வருகிறாா்.

மாநில அளவிலும், மத்திய அளவிலும் நிா்வாகத்தில் 34 ஆண்டுகள் அனுபவம் கொண்ட உத்பல் சிங், உத்தரகண்ட் மாநில தலைமைச் செயலராகவும், மத்திய வேளாண் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராகவும் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com