திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடங்கியது: பக்தா்கள் ஏமாற்றம்

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடங்கியதால், விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
திருமலை
திருமலை

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடங்கியதால், விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இந்த ஆண்டு ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயிலை முதல் முறையாக 10 நாள்களுக்குத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து டிசம்பா் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பக்தா்கள் பலரும் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றனா். இந்த இணையதளம் ஒரு முறைக்கு 20 ஆயிரம் பேரின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் போ் முன்பதிவு செய்ய முயன்ால் இணையதளம் முடங்கியது.

எனவே, பக்தா்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை. நிபுணா்கள் இந்த தொழில்நுட்பப் பிரச்னையை சரிசெய்த பின், மீண்டும் மாலை 3 மணிக்கு இணையதளம் செயல்படத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com