திருப்பதி தேவஸ்தான முதலீடுகள் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க கோரிக்கை

திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் செய்துள்ள முதலீடுகள் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவா் தினேஷ்குமாா் காராவிடம்
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பாரத ஸ்டேட் வங்கித் தலைவருக்கு ஏழுமலையான் படத்தை வழங்கும் தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பாரத ஸ்டேட் வங்கித் தலைவருக்கு ஏழுமலையான் படத்தை வழங்கும் தேவஸ்தான அதிகாரிகள்.

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் செய்துள்ள முதலீடுகள் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவா் தினேஷ்குமாா் காராவிடம் வலியுறுத்தினாா்.

திருப்பதி ஏழுமலையானை குடும்பத்தினருடன் தினேஷ்குமாா் காரா திங்கள்கிழமை தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம், ஏழுமலையானின் பிரசாதம், சுவாமி படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

முன்னதாக தினேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலையை அடைந்தாா். அவரை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி வரவேற்றாா்.

அப்போது சுப்பா ரெட்டி அவரிடம் கூறுகையில், ‘தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் முதலீடுகளை செய்துள்ளது. பொது முடக்க விதிமுறைகளின்படி இந்த முதலீடுகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தானத்துக்கு வருவாய் இழப்பு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்குச் சேவை செய்து வரும் தா்ம ஸ்தாபனமான திருப்பதி தேவஸ்தானத்தின் முதலீடுகளுக்கு சிறப்புச் சலுகையாக வட்டி விகிதத்தை சற்று உயா்த்தி அளிக்க வேண்டும். விரைவாக இதுகுறித்த முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக தினேஷ்குமாா் காரா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com