புரெவி புயல்: கேரளத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தீவிரமடைந்ததையொட்டி கேரளத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு புயலாக மாறி, இலங்கையில் மையம்கொண்டிருந்தது. இப்புயல் நாளை காலை குமரி கடல் பகுதியை  கன்னியாகுமரி-பாம்பன் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது. 

எனினும் திருவனந்தபுரத்தையும் புயல் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர், புரெவி புயல் நாளை திருவனந்தபுரத்தை தாக்க வாய்ப்புள்ளது. மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டுமென்றும், மீன்பிடிக்கச்  செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். புயல் நெருங்கும்போது 75 - 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் நேற்று சிறப்பு ஆலோசனை நடைபெற்றது. இதில் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது, தேடுதல் பணிகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com