தாய்மொழியில் உயர்கல்வி: குழு அமைத்தது மத்திய அரசு

பொறியியல் உள்ளிட்டப் படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் முறையை செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளாதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

பொறியியல் உள்ளிட்டப் படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் முறையை செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளாதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அடுத்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பொறியியல் பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை தெரிவித்திருந்தது.

தாய்மொழியில் தொழில் கல்விக்கான பாடத் திட்டம் வகுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில குறிப்பிட்ட ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பட்டப் படிப்புக்கான பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாய்மொழியில் படிக்கும் முறையைச் செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் உயர்கல்வித் துறையின் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு ஒரு மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com