கரோனாவால் பாதிக்கப்பட்டவா் வீட்டில் சுவரொட்டியை ஒட்ட வலியுறுத்தவில்லை

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு வெளியே பாதிப்பு தொடா்பான சுவரொட்டியை ஒட்டுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு வெளியே பாதிப்பு தொடா்பான சுவரொட்டியை ஒட்டுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வீடுகளில் அது தொடா்பான சுவரொட்டிகளை சில மாநில அரசுகள் ஒட்டி வந்தன. இதன் காரணமாக அந்த வீடுகளைச் சோ்ந்த நபா்களைத் தீண்டத்தகாதவா்கள் போல் மற்றவா்கள் நடத்துவதால், சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கைவிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகளில், பாதிப்புக்குள்ளானோா் வீடுகளில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் களங்கத்துக்கு உள்ளாகக் கூடாது. இதுபோன்று சுவரொட்டிகள் எதையும் ஒட்ட வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றாா். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு மீதான தீா்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com