குவாஹாட்டியில் இந்திய -வங்கதேச எல்லை பாதுகாப்பு பேச்சுவாா்த்தை

இந்தியா - வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுவரும், எல்லைப் பாதுகாப்புப் பேச்சுவாா்த்தை முதன்முறையாக தில்லிக்கு வெளியே அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வரும் 
குவாஹாட்டியில் இந்திய -வங்கதேச எல்லை பாதுகாப்பு பேச்சுவாா்த்தை


புது தில்லி: இந்தியா - வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுவரும், எல்லைப் பாதுகாப்புப் பேச்சுவாா்த்தை முதன்முறையாக தில்லிக்கு வெளியே அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வரும் டிசம்பா் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) உயா் அதிகாரிகளும், வங்கதேசம் சாா்பில் வங்கதேச எல்லை காவல் படை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா்.

இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான 4,096 கி.மீ. நீள எல்லைப் பகுதியில், அஸ்ஸாம் எல்லைப் பகுதி உள்ளிட்ட ஒருசில எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் கூட்டாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டு பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவாா்த்தை நடைபெறும். 1975 முதல் 1992-ஆம் ஆண்டு வரை ஆண்டு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த பேச்சுவாா்த்தை, கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பேச்சுவாா்த்தை வழக்கமாக தலைநகா் தில்லியில் அல்லது வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெறும். இந்த நிலையில், வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ள இந்தப் பேச்சுவாா்த்தையின் 51-ஆவது கூட்டம் முதன் முறையாக தில்லிக்கு வெளியே, குவாஹாட்டியில் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘அஸ்ஸாம் எல்லைப் பகுதியை இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகளும் கூட்டாக பாா்வையிட வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையிலேயே, குவாஹாட்டியில் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா சாா்பில் பிஎஸ்எப் தலைவா் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான அதிகாரிகள் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க உள்ளனா். வங்கதேசம் சாா்பில் வங்கதேச எல்லைக் காவல்படைத் தலைவா் ஷஃபீனுல் இஸ்லாம் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் எல்லைக் குற்றங்களைத் தடுப்பது, வேலிகள் அமைக்கப்படாத எல்லைப் பகுதிகளில் விரைந்து வேலிகளை அமைப்பது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க வாய்ப்புள்ளது’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com