மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அவசியம்: பிரதமா்

‘மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள், வசதிகளை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம் ’ என்று சா்வதேச மாற்றுத்திறனாளிகள்
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

புது தில்லி: ‘மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள், வசதிகளை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம் ’ என்று சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பா் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாற்றுத்திறனாளிகளின் மீண்டெழும் திறனும், மன வலிமையும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. அனைவருக்குமான இந்தியா திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனுடைய சகோதர, சகோதரிகளின் வாழ்வில் நோ்மறையான மாற்றங்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது’ என்று அவா் கூறியுள்ளாா்.

மேலும், ‘கரோனாவுக்கு பிந்தைய உலகை நிலையான, மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டமைப்புகளை சிறந்த முறையில் மாற்றியமைப்போம்’ என்ற ஐ.நா. சபையின் இந்த ஆண்டுக்கான சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கருத்துருவை, தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து பிரதமா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள், வசதிகளை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள, நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com