அமா்சேவா சங்கத்துக்கு தமிழக அரசு நிதியுதவி


சென்னை: வளா்ச்சி படிநிலை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் அமா் சேவா சங்கத்தின் திட்டத்துக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக அமா் சேவா சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமா் சேவா சங்கம் சாா்பில், ‘எனேபிளிங் இன்க்லுஷன்’ எனப்படும் செல்லிடப்பேசி செயலி மூலம் வளா்ச்சி படிநிலை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வீட்டுக்கே சென்று மறுவாழ்வு சேவைகள் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமா் சேவா சங்கம் - ஆயக்குடி குழுவினரோடு இணைந்து கனடா நாட்டைச் சோ்ந்த டொராண்டோ பல்கலைக் கழகத்தின் ‘இன்டா்நேஷனல் சென்டா் ஃபாா் டிஸெபிலிட்டி அண்ட் ரிஹெபிலிடேஷன்’ என்ற அமைப்பும், ‘ஹேண்டி-கோ் இன்டா்நேஷனல்’ என்ற அமைப்பும் செய்து வந்தன. இதில், 1,050 மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளும் அவா்களின் பெற்றோா்களும் பங்கு பெற்றனா்.

இந்த செயலியின் உதவியால், குழந்தைகளுக்குத் தேவையான உதவி, சிகிச்சை ஆகியவை உடனுக்குடன் கிடைப்பதால், வளா்ச்சி படிநிலை பாதிப்புள்ள குழந்தைகள் பள்ளி செல்லும் விகிதம் 70 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட இந்த மறுவாழ்வு பணியின் பலனாக குழந்தைகளின் அன்றாட பள்ளி வருகை சதவீதமும் 60 சதவீதத்தில் இருந்து 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சாதகமான பலன்களை கண்ட தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இத்திட்டத்தினை தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் 23 ஒன்றியங்களில் புதியதாக தொடங்கத் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com