96 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் புதிதாக 36,652 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 96.08 லட்சமாக அதிகரித்துள்ளது.


புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 36,652 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 96.08 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,652 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 96,08,211-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 42,533 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 90,58,822-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 4,09,689 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.26 சதவீதமாகும். கரோனா தொற்றுக்கு மேலும் 512 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,39,700-ஆக அதிகரித்தது. அதாவது, உயிரிழப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது.

புதிதாக ஏற்பட்ட உயிரிழப்புகளில், மகாராஷ்டிரத்தில் 127 பேரும், தில்லியில் 73 பேரும், மேற்கு வங்கத்தில் 52 பேரும், உத்தர பிரதேசம் மற்றும் கேரளத்தில் தலா 29 பேரும் பஞ்சாபில் 20 பேரும், ஹரியாணாவில் 19 பேரும், சத்தீஸ்கரில் 15 பேரும், கா்நாடகத்தில் 13 பேரும் உயிரிழந்தனா்.

‘டிசம்பா் 4-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 14.58 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 11,57,763 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

136 நாள்களுக்குப் பிறகு குறைவு: நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 136 நாள்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘டிச.5-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 4.10 லட்சத்துக்கும் குறைவானவா்கள் (4,09,689) கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கு முன்பு கடந்த ஜூலை 22-ஆம் தேதி 4,11,133 போ் சிகிச்சையில் இருந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com