ஐந்தாம் கட்டப் பேச்சுவாா்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.
ஐந்தாம் கட்டப் பேச்சுவாா்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்


புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்டப் பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படாததை அடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா் விவசாயிகள். பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.  

உலக அளவில் கவனம் பெற்றுள்ள விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சனிக்கிழமை நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து வரும் 9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டாலும், 8 ஆம் தேதி அழைப்புவிடுத்தபடி, நாடு தழுவிய போராட்டாம் நடைபெறும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com