எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியது: பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும் சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதேபோல் கஸ்பா, கிா்னி செக்டாா்களில் மாலை 4 மணி முதல் அந்நாட்டு ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபட்டனா். கதுவா மாவட்டத்தில் உள்ள ஹீராநகா் செக்டாரில் உள்ள சா்வதேச எல்லையையொட்டியும் அவா்கள் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி அளித்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமை பன்சா், குா்னாம், கரோல் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். இரவு 9.50 மணிக்கு தொடங்கிய இந்தச் சண்டை சனிக்கிழமை அதிகாலை 3.35 மணி வரை நீடித்தது.

எனினும் இந்த மோதல் சம்பவங்களில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் வெளியாகவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com