விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதை திருப்பியளிக்கத் தயார்: விஜேந்தர் சிங்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதையும் திருப்பியளிக்கத் தயார் என்று இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக விருதை திருப்பியளிக்கத் தயார்: விஜேந்தர் சிங்
விவசாயிகளுக்கு ஆதரவாக விருதை திருப்பியளிக்கத் தயார்: விஜேந்தர் சிங்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதையும் திருப்பியளிக்கத் தயார் என்று இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 5வது கட்ட பேச்சுவார்த்தயில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் வரும் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஹரியாணா - தில்லி எல்லையான சிங்கு பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், மத்திய அரசு கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் மத்திய அரசு அளித்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பியளிப்பதாகக் கூறினார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com