புதிய டிரக் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி தொடக்கம்:விஇசிவி

இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிரக் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளதாக வா்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான விஇசிவி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
புதிய டிரக் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி தொடக்கம்:விஇசிவி


புது தில்லி: இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிரக் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளதாக வா்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான விஇசிவி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

விஇசிவி நிறுவனத்தின் புதிய டிரக் தயாரிப்பு ஆலை மத்திய பிரதேசம் போபாலில் உள்ள பக்ரோடாவில் அமைக்கப்பட்டுள்ளது. இது, நிறுவனம் அமைக்கும் எட்டாவது ஆலையாகும். இதற்காக, விஇசிவி நிறுவனம் ரூ.5,000 கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்த எட்டாவது ஆலையில், உற்பத்தி பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதனை, மத்திய பிரதேச முதல்வா் சிவ்ராஜ் சிங் செளகான் தொடக்கி வைத்தாா்.

டிரக் உற்பத்தியில் தேவையான பாகங்களை வழங்குவதற்காக 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் மற்றும் பிற விநியோகஸ்தா்களை விஇசிவி ஈா்த்துள்ளது. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 30,000-க்கும் மேற்பட்டவா்கள் வேலைவாய்ப்புகளை பெறுவா்.

உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்யவும், வெளிநாடுகளில் புதிய சந்தைகளில் தடம் பதிக்கவும் இந்த புதிய டிரக் தயாரிப்பு ஆலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா சுய சாா்பை நோக்கி நகரும் இலக்குக்கு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை உறுதுணையாக இருக்கும் என்று விஇசிவி தெரிவித்துள்ளது.

படவிளக்கம்: மத்திய பிரதேசத்தில் விஇசிவி நிறுவனத்தின் புதிய ஆலையில் உற்பத்தியை தொடக்கி கொடியசைத்து துவக்கி வைக்கும் அம்மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் செளகான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com