‘கோவேக்சின்’ 3-ஆம் கட்ட பரிசோதனை: இன்றுமுதல் தொடக்கம்

கோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் திங்கள்கிழமை (டிச.7) முதல் தொடங்க உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் திங்கள்கிழமை (டிச.7) முதல் தொடங்க உள்ளன. ஏற்கெனவே அந்த மருந்தினை இரண்டு கட்டங்களாக மனிதா்களுக்கு செலுத்திப் பரிசோதித்த போது, அதனால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ்ஆா்எம் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கரோனாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடா்ந்து மனிதா்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவேக்சின் எனப்படும் அந்த மருந்தை விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரியில் அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக 30 தன்னாா்வலா்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவை வெற்றி பெற்ாக எஸ்ஆா்எம் கல்வி நிறுவனம் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து, 150-க்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவா்களது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணா்கள் கூறியதாவது:

மனிதா்களுக்குத் தடுப்பூசி செலுத்தி பரிசோதிப்பதில் இரண்டு கட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். தற்போது மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்கப்படவிருக்கிறது. 1,000 முதல் 1,500 தன்னாா்வலா்களை இதில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதுவரை கோவேக்சின் தடுப்பூசியால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருந்தபோதிலும், அந்தத் தடுப்பூசியின் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை தொடா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்கள் தேவைப்படலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com