குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கும் எதிர்கட்சித் தலைவர்கள்: சீத்தாராம் யெச்சூரி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை எதிர்கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை எதிர்கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரை நாளை எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசவுள்ளனர்.

இதுகுறித்து சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பில், ராகுல் காந்தி, சரத் பாவர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கரோனா பரவல் காரணமாக 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என க் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com