
’மக்களின் அடிப்படை உரிமைகளை அழித்து கோடிகளில் கட்டடம்’: சீதாராம் யெச்சூரி
மக்களின் அடிப்படை உரிமைகளை அழித்துவிட்டு தங்களுக்கு கோடிகளில் புதிய கட்டடங்களை மத்திய அரசு கட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசால் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவை தில்லியில் கட்டப்படவுள்ளன. ரூ.861.9 கோடி செலவில் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய நாடாளுமன்றக் கட்டுமானத் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Destroying fundamental rights & civil liberties of the people, at the same time, spending ₹thousands of crores on new planes, a house for yourself & unnecessary buildings, in the times of rising miseries of people is criminal.
— Sitaram Yechury (@SitaramYechury) December 9, 2020
Scrap the Central Vista extravaganza. pic.twitter.com/r5iR6iFva7
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சிவில் உரிமைகளை அழிக்கும் அதே வேளையில் கோடிக்கணக்கில் தேவையற்ற புதிய விமானங்கள் மற்றும் கட்டடங்களை மத்திய அரசு கட்டி வருகிறது. மக்களின் துயர் அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய நாடாளுமன்றத்துக்கான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் களியாட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.