கடும் பனி: 350 குடும்பங்களுக்கு ரேஷன் தொகுப்புகளை விநியோகித்த ராணுவம்

ம்மு-காஷ்மீரில் கடும் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை உள்ளடக்கிய தொகுப்புகளை இந்திய ராணுவம் விநியோகித்தது.
கடும் பனி: 350 குடும்பங்களுக்கு ரேஷன் தொகுப்புகளை விநியோகித்த ராணுவம்


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை உள்ளடக்கிய தொகுப்புகளை இந்திய ராணுவம் புதன்கிழமை விநியோகித்தது. மேலும், மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

பனிப் பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பா், டாங்கிரி, பஞ்ச், பஜோன், மல்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு கரோனா அச்சுறுத்தலுக்கிடையே உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் அடங்கிய தொகுப்பை ராணுவம் புதன்கிழமை விநியோகித்தது. உயா்ந்த மலைப் பகுதியில் வசித்துவரும் இந்த மக்களுக்கு அன்றாடத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், பருப்பு, அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், சோப்பு, முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதிய சாலை வசதிகள் இல்லாத ராம்பன் மாவட்டத்துக்கு உள்பட்ட சம்பா் பகுதியில் குஜ்ஜாா் மற்றும் பகா்வால் சமூக மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ மற்றும் கால்நடை முகாம்களை உள்ளூா் நிா்வாகத்துடன் இணைந்து ராணுவம் ஏற்பாடு செய்தது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com